லக்ட்ரிக் கார்களுக்கு புதிய பேட்டரி கண்டுபிடிப்பு: கார் விலை பாதியாக குறைய வாய்ப்பு

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு அனைத்து நிறுவனங்களும் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. ஆனால், எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை வடிவமைப்பதுதான் மிகுந்த சவாலாக இருக்கிறது.
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் லித்தியம் அயான் பேட்டரியின் விலை எலக்ட்ரிக் காரின் விலையில் பாதியளவுக்கு இருக்கிறது. சாதாரண ரக எரிபொருள் கார்களை விட எலக்ட்ரிக் கார்களின் விலை மும்மடங்கு கூடுதலாக இருப்பதற்கு எலக்டிரிக் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரிதான் காரணம். இதனால்தான், எலக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களுக்கான புதிய பேட்டரி ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த என்வியா சிஸ்டம்ஸ் வடிவமைத்துள்ளது. தற்போதைய லித்தியம் அயான் பேட்டரியை விட இது இருமடங்கு கூடுதல் சேமிப்பு திறனை இந்த பேட்டரி வழங்கும் என்பதோடு விலையும் பாதியாக இருக்கும்.
400 வாட் மின்சாரத்தை சேமிக்கும் ஆற்றல் கொண்ட இந்த பேட்டரி அளவிலும் சிறியதாக இருக்கும் என்பதால் காரில் பொருத்தப்படும்போது இடத்தையும் அடைத்துக்கொள்ளாது. தற்போது சோதனை நிலைகளில் வெற்றியடைந்துள்ள இந்த புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரியை மேலும் மேம்படுத்தி அடுத்த சில ஆண்டுகளில் வணிகரீதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வர என்வியா திட்டமிட்டுள்ளது.
வணிக ரீதியில் விற்பனை செய்வதற்கான சில சோதனைகளில் வெற்றியடைந்துவிட்டால் விற்பனைக்கு வந்துவிடும் என்வியா பேட்டரி. எனவே, என்வியா விற்பனைக்கு வந்தால் எலக்ட்ரிக் கார்களின் விலை பாதியாக குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








