சவாலான விலையில் புதிய ஆல்ட்டோ 800: மாருதி அறிமுகம்

 Alto 800
வாடிக்கையாளர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய ஆல்ட்டோ 800 கார் சற்றுமுன் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெல்லியில் நடந்த விழாவில், புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி சுஸுகி மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சின்ஷோ நகனிஷி பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்தார்.

கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆல்ட்டோ கார் வாடிக்கையாளர் நெஞ்சங்களில் முத்திரை பதித்த மாடலாக வலம் வந்தது. குறைந்த விலை, அதிக மைலேஜ் என அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் விதமாக புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி வடிவமைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகால முயற்சியில் 200 எஞ்சினியர்களின் உழைப்பில் புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி வடிவமைத்துள்ளது.

வழக்கம்போல் குறைந்த விலை அதிக மைலேஜ், கூடுதல் அம்சங்கள் என எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்த நிலையில், இந்த புதிய காரை இன்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் தலா 3 வேரியண்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வடிவமைப்பில் முற்றிலும் புதிதாக வந்திருக்கும் புதிய ஆல்ட்டோ 800 காரை அறிமுகப்படுத்திய பின் பேசிய மாருதி சுஸுகி தலைமை செயல் அதிகாரி சின்ஷோ நகனிஷி கூறியதாவது:

"கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆல்ட்டோ கார் தொடர்ந்து இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது.

இதை தக்க வைக்கும் விதத்தில் அதிக மைலேஜ், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு என வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் புதிய ஆல்ட்டோ காரை அறிமுகம் செய்துள்ளோம்.

புதிய ஆல்ட்டோ காரும் நிச்சயம் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதோடு, தனது மார்க்கெட்டை தொடர்ந்து தக்க வைக்கும். இதுவரை புதிய ஆல்ட்டோ 800 காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்," என்றார்.

விலை விபரம்:

பெட்ரோல் வேரியண்ட்கள்

ஸ்டான்டர்டு : ரூ.2.44 லட்சம்

எல்எக்ஸ் : ரூ.2.76 லட்சம்

எல்எக்ஸ்ஐ : ரூ.2.99 லட்சம்

சிஎன்ஜி வேரியண்ட்கள்

ஸ்டான்டர்டு : ரூ.3.19 லட்சம்

எல்எக்ஸ் : ரூ.3.37 லட்சம்

எல்எக்ஸ்ஐ : ரூ.3.70 லட்சம்

More from DriveSpark

Article Published On: Tuesday, October 16, 2012, 13:22 [IST]
English summary
Maruti Suzuki has finally launched the much awaited 2012 new Alto 800 hatchback. Maruti has completely re-modelled its best selling hatchback, the alto 800. Currently Maruti sells the Alto in two avatars. One being the 800 Alto and the other the Alto 1000. This new re-modelled Alto 800 will replace the old model Alto 800.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+