ஆச்சர்யம்... 10 நாளில் விற்று தீர்ந்த புதிய பென்ஸ் எஸ்யூவி!
கடந்த 15ந் தேதி லிமிடேட் எடிசன் எம் கிளாஸ் எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏஎம்ஜி பிராண்டு முத்திரையுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியது. மேலும், பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்தது.
ரூ.60 லட்சத்தில் வந்த இந்த புதிய லிமிடேட் எடிசன் எம்-கிளாஸ் எஸ்யூவி தற்போது விற்கப்பட்டு வரும் பென்ஸ் பிராண்டு எம்-கிளாஸ் எஸ்யூவியைவிட ரூ.10 லட்சம் வரை அதிகம். இந்தியாவில் 100 லிமிடேட் எடிசன் எம்-கிளாஸ் எஸ்யூவிக்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாக பென்ஸ் அறிவித்தது.

இந்த நிலையில், எதிர்பாராத வகையில், வெறும் 10 நாட்களில் இந்த லிமிடேட் எடிசன் எம்-கிளாஸ் எஸ்யூவி அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டு விட்டதாக பென்ஸ் அறிவித்துள்ளது. இது சொகுசு கார் மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த ஸ்பெஷல் எடிசன் எம்-கிளாஸ் எஸ்யூவிக்கு ஏராளமான சிறப்பு அக்சஸெரீஸ்களையும் விற்பனை செய்ய உள்ளதாக பென்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு தனி விலை என்றும் பென்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








