800, ஆல்ட்டோவுக்கு மாற்றாக புதிய கார்கள்: மாருதி அறிவிப்பு

Maruti 800
கடும் போட்டிகளையும் பொருட்படுத்தாமல் சந்தையில் நீண்ட காலமாக வெற்றிகரமான மாடல்களாக வலம் வரும் 800 மற்றும் ஆல்ட்டோ கார்களுக்கு மாற்றாக புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கான வடிவமைப்பு மற்றும் அதிக மைலேஜ் தரும் வகையில் புதிய மாடல்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக மாருதி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி நி்ர்வாக இயக்குனர் ஷின்ஷோ நகனிஷி கூறியதாவது:

"இந்திய சந்தையில் இந்த இரண்டு மாடல்களும் மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றன. எனவே, சந்தை போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய தலைமுறை அம்சங்களுடன் இந்த இரண்டு கார்களுக்கும் மாற்றாக புதிய மாடல்களை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

புதிய மாடல்களிலும் 800 சிசி எஞ்சின் இருக்கும் என்றாலும், தற்போதைய மாடல்களைவிட அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு்ள்ளோம்," என்றார்.

பழைய மாடல்களுக்கு பதில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதால் மாருதிக்கு ரூ.550 கோடி செலவீனம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The Maruti 800 and Alto will be replaced by new models, says Maruti higher official. Now Maruti is working on a replacement models for 800 and Alto to bring in a more contemporary and fuel-efficient model by next two years.
Story first published: Thursday, January 12, 2012, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X