குறைந்த விலையில் புதிய சூப்பர்ப் கார்: ஸ்கோடா களமிறக்குகிறது

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிரிமியம் அந்தஸ்து பெற்ற கார் நிறுவனமாக திகழ்கிறது. மேலும், மிதமான வளர்ச்சி பெற்று வரும் அந்த நிறுவனம் கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில், பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1.4 லட்சம் குறைவான விலையில் புதிய சூப்பர்ப் வேரியண்ட்டை ஸ்கோடா ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வருகிறது. தற்போது சூப்பர்ப் பிரிமியம் செடான் கார் ரூ.18 லட்சம் முதல் ரூ.26 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய சூப்பர்ப் காரை ரூ.17 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹோண்டா அக்கார்டு காருக்கு கடும் போட்டியை கொடுக்கும் இந்த காரின் பலம் டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைப்பதுதான்.
ஆம்பிஷன் என்ற குறைந்த விலை வேரியண்ட்டில் புதிய சூப்பர்ப் வர இருக்கிறது. சூப்பர்ப் காரில் 160 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினும், 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஆட்டோமேட்டிக் சன்ரூப், இஎஸ்பி, ஏபிஎஸ், இபிடி, டிசிஎஸ் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை சூப்பர்ப் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








