குட்டி ஸ்விப்ட் டிசையர் சிறப்பம்சங்கள் லிஸ்ட்

பழைய ஸ்விப்ட்டைவிட ரூ.23,000 குறைவான விலையில் வந்தாலும், குட்டி ஸ்விப்ட் டிசையர் 150 கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. வடிவமைப்பு மற்றும் வசதிகளில் ஏராளமான மாற்றங்களுடன் வந்துள்ள புதிய ஸ்விப்ட் டிசையரின் முக்கிய கூடுதல் சிறப்பம்சங்களை மட்டும் இங்கே காணலாம்.
சிறப்பம்சங்கள் லிஸ்ட்:
மேம்படுத்தப்பட்ட புதிய சஸ்பென்ஷன்
பழைய டிசையரைவிட எடை குறைவு
ஆட்டோமேட்டிக் வேரியண்ட்
கவர்ச்சியான முன்பக்கம் புதிய கிரில்
பெரிய ஹெட்லைட்டுகள்
குரோம் பூச்சு கொண்ட பூட் லிட்(டிக்கி கதவை மேலே தூக்கும் லிவர்)
ரிஃப்லெக்டருடன் கூடிய பெரிய பின்பக்க பம்பர்
எடுப்பான பின்பக்க டேஞ்சர் விளக்குகள்
ரியர் டிஃபாகர்(பின்புறம் கண்ணாடியை சுத்தம் செய்யும் வைப்பர்)
ரியர் வியூ மிரர்களில் டர்ன் இன்டிகேட்டர்
பாடி கலரில் வெளிப்புற கைப்பிடிகள்
புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள்
குரோம் பினிஷ் கொண்ட உட்புற கைப்பிடிகள்
எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் வசதியுடன் ரியர் வியூ மிரர்
மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள் மற்றும் டேஷ்போர்டு
ஏசி காற்றை வாரி இறைக்க வசதியாக பெரிய ஏசி வென்ட்டுகள்
யுஎஸ்பி/சிடி/ஏஎம் மற்றும் எப்எம் ரேடியோ/ஆக்ஸ் இன்புட் வசதியுடன் ஒருங்கிணைந்த மியூசிக் சிஸ்டம்
டில்ட் அட்ஜெஸ்டபிள் ஸ்டீயரிங்
ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள்
இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
ஸ்போர்ட்டி லுக்குடன் பிளாக்-சில்வர் வண்ணங்களில் 3 ஸ்போக்குளுடன் ஸ்டீயரிங் வீல்
அகலமான டேக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர்
டிஜிட்டல் மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே சிஸ்டம்
பியேஜ் மற்றும் கிரே கலரில் இன்டிரியர்கள்
உள்பக்கம் அதிக இடவசதி
டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள்
எளிதாக மூடி திறக்கும் வசதியுடன் கப் ஹோல்டர்
பின்பக்க கதவில் சைல்டு லாக் வசதி
பாதுகாப்புக்காக அலாரம் வசதி
இம்மொபைலைசர்
சீட் பெல்ட் இண்டிகேட்டர்
லைட்டுகள் எரிவதை நினைவூட்டும் இண்டிகேட்டர்
சாவி ஆனில் இருப்பதை நினைவூட்டும் இண்டிகேட்டர்
கதவுகள் சரியாக மூடாததை எச்சரிக்கும் இண்டிகேட்டர்
டிஜிட்டல் கடிகாரம்
எரிபொருள் உட்கொணர்வை காட்டும் டிஸ்ப்ளே சிஸ்டம்
வெளிப்புற வெப்பநிலையை காட்டும் டிஸ்ப்ளே
டிரைவர் சீட் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி
முன் வரிசை இருக்கைகளின் பின்புறத்தில் பொருட்கள் வைப்பதற்கான பாக்கெட்டுகள்
பின்புற இருக்கைகளுக்கு கைகளை வைப்பதற்கு வசதியாக ஆர்ம் ரெஸ்ட்டுகள்
பவர் விண்டோஸ்
சென்ட்ரல் லாக்கிங்
கீ லெஸ் என்ட்ரி
ரிமோட் கன்ட்ரோல் மூலம் பின்பக்க கதவை திறக்கும் வசதி
டே அண்ட் நைட் தொழில்நுட்பம் கொண்ட உட்புற ரியர் வியூ மிரர்
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பனி விளக்குகள்
டிக்கியில் லைட் வசதி
பச்சை கலர் சன் கன்ட்ரோல் பிலிம் கொண்ட கண்ணாடிகள்


Click it and Unblock the Notifications








