கோல்ஃபை வைத்து கோல் அடிக்க போக்ஸ்வேகன் திட்டம்!

நம்மூர் மார்க்கெட்டில் மாருதி ஆல்ட்டோ போன்று ஐரோப்பிய மார்க்கெட்டில் போக்ஸ்வேகனின் கோல்ஃப் கார் அதிகம் விற்பனையாகும் கார் மாடல். அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்பதால் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது புதிய தலைமுறை அம்சங்களுடன் தனது எம்க்யூபி பிளாட்பார்மில் புதிய கோல்ஃப் காரை வடிவமைத்துள்ளது. 7ம் தலைமுறை கண்டுள்ள இந்த புதிய கோல்ஃப் காரை பாரிஸ் மோட்டார் ஷோவில் போக்ஸ்வேகன் பார்வைக்கு வைத்துள்ளது. இந்த புதிய கார் 2014ம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. எனவே, இந்த காரின் வடிவமைப்பை ஸ்லைடரில் காணலாம்.
புதிய கோல்ஃப் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 84 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் எஞ்சின் மற்றும் 138பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் வந்துள்ளது.
இதேபோன்றே டீசல் மாடலும் 104 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சின் மற்றும் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
(பாரிஸ் மோட்டார் ஷோ நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தளத்தை பின்தொடருங்கள்)


Click it and Unblock the Notifications








