மோசடிகள் நிறைந்த யூஸ்டு கார்களின் வரலாறு: ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் விற்பனையாகும் பயன்படுத்திய கார்களின் வரலாற்று பின்னணி குறித்து அங்கிருந்து செயல்படும் பொருளாதார துறையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. ஒரு லட்சம் வாடிக்கையாளர்களிடம் தங்களது யூஸ்டு கார் குறித்த விபரங்களை கேட்டறிந்தது.
மேலும், பயன்படுத்திய கார் மார்க்கெட்டிலும் புகுந்து அலசி ஆராய்ந்தது. இதில், பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. அமெரிக்காவில் விற்பனையாகும் 10 கார்களில் 9 கார்களின் வரலாறு மோசமானதாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 3 கார்கள் திருட்டு கார்கள் அல்லது பயன்படுத்த லாயக்கில்லாத ஓரங்கட்டப்பட்ட கார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட, பெரும்பான்மையான கார்கள் கடனில் வாங்கப்பட்டுள்ளதாகவும், கடனை தீர்க்காமலேயே மோசடியாக அந்த யூஸ்டு கார்கள் வாடிக்கையாளர் தலையில் கட்டப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும், விபத்தில் சிக்கிய கார்களும் உண்மை தகவல் மறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதில்தான், ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏமாந்துள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இதைவிட மற்றொரு விஷயம், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் 93 சதவீத பயன்படுத்திய ரினால்ட் க்ளியோஸ் கார்கள் மோசமான பின்னணி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான ஃபோர்டு ஃபோகஸ் மற்றும் வோக்ஸ்வேகன் கோல்ப் ஆகிய கார்கள் பெரும்பாலும் கடன் தவணைகள் நிலுவையில் இருந்ததும் இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வை வெளியிட்ட நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,"பயன்படுத்திய கார் வாங்கும்போது அதன் வரலாறை நன்கு அலசி பார்த்து, நம்பிக்கை வந்தவுடன் வாங்குவதுதான் சிறந்தது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications