நிசான் 370 இசட் ஸ்போர்ட்ஸ் கார்- பிரத்யேக டெஸ்ட் டிரைவ்

By -சரவணராஜன்
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை லஞ்ச்சை முடித்துக்கொண்டு, அலுவலகத்தில் அமர்ந்து அடுத்தக்கட்ட பணிகளில் வழக்கம்போல் பிஸியாக இருந்தேன். அப்போது, நிசானிடமிருந்து சர்ப்ரைஸ் அழைப்பு ஒன்று வந்தது.

காதில் போனை வைத்தவாறு கைகள் செய்தி எழுதும் பணியில் மும்முராக இருந்தது. அப்போது, மறுமுனையில் பேசிய நிசான் பிரதிநிதி, 370 இசட் ஸ்போர்ட்ஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை பெங்களூரில் வழங்க உள்ளோம், வருகிறீர்களா என்றார்.

சட்டென்று செய்தி எழுதுவதை தற்காலிமாக நிறுத்திவிட்டு, அவரிடம் பேசினேன். ஹேட்ச்பேக், நாட்ச்பேக், செடான், எஸ்யூவி கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து வாசகர்களுக்கு வழங்கி வந்த நமக்கு ஸ்போர்ட்ஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்து அதன் அனுபவத்தை வாசகர்களுக்கு பகிர்ந்துகொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் மனதுக்குள் பளிச்சிட்டது.

சக டிரைவ் ஸ்பார்க் டீம் நண்பர்களுடன் சிறு ஆலோசனை நடத்திவிட்டு, நிசான் பிரதிநிதியிடம் சட்டென்று தாமதிக்காமல் தலையாட்டினேன்.

இதைத்தொடர்ந்து, டிரைவ் ஸ்பார்க் டீமின் சக எடிட்டர்களும் பரபரப்பானார்கள். மேலும், டெஸ்ட் டிரைவ் செல்வதற்காக சிறு ஆலோசனை நடத்தினோம். ஏனெனில், ஒரு காரை நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்று டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன.

ஒருவழியாக நடைமுறைகள் முடித்து அனுமதிகளை பெற்றபோது பெங்களூரிலுள்ள நைஸ் சுங்கச்சாலையிலுள்ள டெஸ்ட் டிராக்கில் காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு அனுமதி கிட்டியது. மேலும், எங்களுக்கு காலை 11 மணிக்கு டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை காலை சரியாக 7.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நைஸ் சாலையில் உள்ள டெஸ்ட் டிராக்கை அடைந்தோம். சில நிமிடங்களில் அங்கு 370 இசட் ஸ்போர்ட்ஸ் கார் டெஸ்ட் டிரைவுக்காக அங்கு வந்தது. மேலும், ஏராளமான ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களும் அங்கு குழுமினர்.

இதைத்தொடர்ந்து, ஒவ்வொருவராக அந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்ய எடுத்துச்சென்று தங்களது வீர தீர டிரைவிங் பராக்கிரமங்களை காட்டத் துவங்கினர். மேலும், அந்த காரின் அலாதியான சப்தத்தை கேட்டதும் நம் கைகளும் பரபரத்தது.

இதனிடையே, நமது சுற்று வரும் வரை காத்திருந்த நமக்கு பெங்களூரில் இருக்கிறோமோ அல்லது சென்னையில் இருக்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்கு வெயில் வறுத்து எடுத்தது. இருப்பினும், அந்த கார் அவ்வப்போது வந்து நம் மனதை குளுமைப்படுத்தியது.

ஒருவழியாக 12.30 மணிக்கு நம் கையில் கார் கிடைத்தது. காருக்குள் ஏறும் முன்பே காரைப் பற்றிய அனைத்து தொழில்நுட்பங்கள் மற்றும் இதர இத்தியாதிகளை நிசான் நிறுவனத்தின் டிரைவர் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த 370 இசட் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார். மேனுவல் கியர் பாக்சுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இருந்தது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 280 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்தது. காரில் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த எஞ்சின் 334 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

எனவே, இரண்டு இருக்கைகள் கொண்ட அந்த காரில் நிசான் பயிற்சி பெற்ற டிரைவரும் பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொண்டார். இந்த காரில் கிளட்ச் கிடையாது. பிரேக், ஆக்ஸிலேட்டர் பெடல்கள் மட்டும்தான். மேலும், ஸ்டீயரிங்கிலேயே கியரை கூட்டி குறைத்துக்கொள்ளும் ஸ்விட்ச் மற்றும் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகளும் இருந்தன.

ஆட்டோமேட்டிக் கியரில் பார்வர்டு கியரை மாற்றி ஆக்ஸிலேட்டரில் விரலை வைத்தோம். தனக்கே உரிய பாணியில் அந்த அலாதியான சப்தத்துடன் அந்த இடத்திலிருந்து சீறிப் பாய்ந்தது. ஆனால், காருக்குள் எவ்விதமான சலனமும் இல்லாமல் சிட்டாய் பறக்கத் துவங்கியது. அது டெஸ்ட் டிராக் சாலை என்பதால், ஆக்சிலேட்டரை கூட்டினோம்.

திக்கி திணறாமல் ஸ்பீடோமீட்டரில் மணிக்கு 160 கிமீ வேகம் முள் காட்டிய வரை அந்த சாலையில் பறந்தோம். ஆனால், காருக்குள் அந்த வேகம் தெரியாத அளவுக்கு கன்ட்ரோல் செய்து ஓட்ட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது அதன் ஸ்டீயரிங்கும், பிரேக்குகளும். சும்மா நச்சுன்னு இருக்குன்னு சொல்லலாம்.

வேகத்தை கூட்டிக்குறைத்தாலும் இது ஆட்டோமேட்டிக் கியர் வசதியை கொண்டிருப்பதால், நமக்கு கியரை மாற்றும் வேலை மிச்சமாகிறது. மேலும், ஆக்ஸிலேட்டர், பிரேக் இரண்டு கன்ட்ரோல் மட்டுமே இருப்பதால், அதிவேக திறன் கொண்ட காரை ஓட்டுகிறோம் என்ற அச்சம் இல்லை.

காரின் உயரம் மிகக் குறைவு என்பதால் அதிக ரோடு கிரிப்புடன் பறக்கிறது. காற்றை கிழித்துச் செல்லும் வகையில் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பு, மீன் கண் போன்ற முன்பக்க ஹெட்லைட் டிசைன் ஆகியவை கவர்வதாக இருக்கிறது.

சாலையில் சிறிதும் பிறழாமல் தனது செயல் வேகத்தில் பின்னுகிறது 370 இசட். 40 கிமீ வரை அந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். ஸ்டீயரிங்கிலேயே கன்ட்ரோல் ஸ்விட்சுகள் இருப்பதால் ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் சர்வசாதாரணமாக ஓட்ட முடிந்தது.

இதைத்தொடர்ந்து, அங்குள்ள ரிசார்ட்டில் வெயிலுக்கு ரிலாக்ஸ் செய்துகொண்டு அலுவலகத்திற்கு திரும்பினோம். ஆனால், அந்த காரின் அலாதியான சப்தம் மட்டும் காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

இந்த கார் ரூ.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

(நிசான் 370 இசட் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

More from DriveSpark

Article Published On: Monday, February 27, 2012, 10:25 [IST]
English summary
Driivespark test drove Nissan's iconic sports car 370Z on the fast and exciting NICE roads of Bangalore. The 370Z is a powerful machine that offers great performance. It is a truly fast car and we had a great experience driving it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+