ஜூலையில் நிசான் கார் விற்பனை இருமடங்கு உயர்வு

Nissan Car
நிசான் விற்பனையில் சன்னி தொடர்ந்து முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. இதனால், கடந்த மாதம் நிசான் கார் விற்பனை இரு மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு வெறும் 1,593 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிசான், கடந்த மாதம் மொத்தம் 3,481 கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் சன்னி விற்பனைக்கு வந்திருக்கவில்லை. மைக்ரா மட்டுமே கடந்த ஆண்டு ஜூலையில் விற்பனை செய்ததால் மிகக் குறைந்த விற்பனையை பதிவு செய்தது.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தையொட்டி வந்த சன்னி தொடர்ந்து நிசான் விற்பனையில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருகிறது.

கடந்த மாதம் மட்டும் 2,436 சன்னி மிட் சைஸ் செடான் கார்களை நிசான் விற்பனை செய்திருக்கிறது. மைக்ரா காரின் விற்பனை தொடர்ந்து மந்தமாகவே இருக்கிறது.

கடந்த மாதம் 1,028 மைக்ரா கார்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தநிலையில், விரைவில் குறைந்த விலை மைக்ரா காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, சன்னியின் எல்பிஜி மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த இரு புதிய மாடல்களும் விற்பனைக்கு வந்தவுடன் நிசான் விற்பனையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 2, 2012, 9:12 [IST]
English summary
Japanese Car maker Nissan car sales for July increased by over two-fold at 3,481 units. The company had witnessed sales of 1,593 units in the corresponding month last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+