டஸ்ட்டரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரும் நிசான்
டஸ்ட்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலை அறிமுகம் செய்வதை நிசான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. ஜப்பானிய நிறுவனமான நிசான் மற்றும் பிரான்சை சேர்ந்த ரினால்ட் ஆகியவை சர்வதேச அளவில் கூட்டணி நிறுவனங்களாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியாவிலும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன. உற்பத்தி ஒரே ஆலையில் செய்யப்பட்டாலும் விற்பனையை தனித்தனியாக வைத்து வர்த்தகம் செய்து வருகின்றன.
நிசான் தயாரிப்புகளான மைக்ரா, சன்னி கார்களை நிசான் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரினால்ட்டின் வெற்றிகரமான எஸ்யூவியாக உருவெடுத்திருக்கும் டஸ்ட்டரை நிசான் தற்போது ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

என்எச்-79... தேசிய நெடுஞ்சாலை அல்ல...!
என்எச்-79 என்ற பெயரை கேட்டவுடன் நம்மூர் தேசிய நெடுஞ்சாலையின் குறியீட்டு பெயர் என்று நினைக்க வேண்டாம். இந்த குறியீட்டு பெயரில்தான் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை நிசான் ரீபேட்ஜ் செய்து வருகிறது.

டஸ்ட்டரின் குளோனிங்..!
இது டஸ்ட்டரின் குளோனிங்தான். வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில மாறுதல்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் தவிர, டஸ்ட்டருக்கும் நிசான் களமிறக்கும் எஸ்யூவிக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. ]

எஞ்சின்
இந்த எஸ்யூவியிலும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும். டஸ்ட்டர் லிட்டருக்கு 20.45 கிமீ மைலேஜ் செல்வதாக அராய் சான்று கொடுத்திருப்பது நினைவுகூறத்தக்கது.

விலை நிர்ணயம்
டஸ்ட்டரை விட குறைந்த விலையில் டஸ்ட்டர் குளோனிங்கை களமிறக்க நிசான் முடிவு செய்துள்ளது. சென்னையில் டஸ்ட்டர் ரூ.8.46 லட்சம் முதல் ரூ.13.77 லட்சம் விலை வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுகம் எப்போது?
அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது நிசான். பல புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனையில் எந்தளவுக்கு நிசானுக்கு கைகொடு்க்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








