பஜாஜ் குட்டிக் கார் திட்டத்திலிருந்து விலகுவதாக நிசான் அறிவிப்பு

Bajaj RE60
குட்டி காரை விற்பனை செய்வதற்காக பஜாஜ் ஆட்டோவுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து நிசான் விலகியுள்ளது.

இருசக்கர மற்றும் மூன்று வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ 4 சக்கர வாகன தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. ஆர்இ60 என்ற குட்டிக் காரை தயாரித்துள்ளது.

இந்த வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகளை பஜாஜ் ஆட்டோவும், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பொறுப்புகளை நிசான்-ரினால்ட் கூட்டணியும் மேற்கொள்ளும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ தயாரித்த குட்டிக் கார் மீது ரினால்ட் அதிருப்தி தெரிவித்து திட்டத்திலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. நிசான் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த எவாலியா கார் அறிமுக விழாவில் நிசான் நிறுவனத்தின் ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய பிராந்தியத்துக்கான துணைத் தலைவர் டோரு ஹேசிகவா கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்," பஜாஜ் வடிவமைத்துள்ள குட்டிக் காரை விற்பனை செய்யும் திட்டத்திலிருந்து விலகியுள்ளோம். இனி திட்டம் தொடர்பாக பஜாஜ் ஆட்டோவுடன் உறவை தொடர விரும்பவில்லை," என்று கூறினார்.

ஆனால், இந்த திட்டத்திலிருந்து விலகுவதற்கான காரணங்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை. இதனிடையே, செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கருத்து தெரிவித்த பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ்," இந்த விஷயம் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் தெரியாது," என்றார்.

இந்த நிலையில், நிசான்- ரினால்ட் கூட்டணி கைவிட்டாலும், ஆர்இ60 குட்டி பயணிகள் வாகனத்தை தனியாக விற்பனை செய்ய பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளையும் அந்த நிறுவனம் தீவிரமாக செய்து வருகிறது. ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்று வாகனமாக இந்த 4 சக்கர குட்டி பயணிகள் வாகனத்தை வர்த்தக மார்க்கெட்டில் நிலைநிறுத்த பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 26, 2012, 9:54 [IST]
English summary
Japanese car maker Nissan has ruled out any future partnership with the Bajaj Auto on the ultra-low cost car Project.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+