இவாலியா சோதனை ஓட்டம்: முன்னதாகவே களமிறக்குமா நிசான்?

Nissan Evalia
பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிசான் இவாலியா 7 சீட்டர் எம்பிவி காரின் சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, முன்கூட்டியே இவாலியா விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய எம்பிவி காரை நிசான் காட்சிக்கு வைத்திருந்தது. இவாலியா என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த எம்பிவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த புதிய எம்பிவி கார் மாருதி ஓம்னி போன்று பக்கவாட்டில் திறந்து மூடும் ஸ்லைடர் கதவுகளுடன் காட்சி தந்தது. அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட இந்த காரை வரும் ஆகஸ்ட்டில் விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூர்-மைசூர் சாலையில் இவாலியா சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் ஆகிய புதிய எம்பிவி கார்கள் விரைவில் வர உள்ளன. எனவே,, போட்டியை சமாளிக்கும் விதத்தில் இவாலியாவை முன்கூட்டியே நிசான் விற்பனைக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 20, 2012, 14:51 [IST]
English summary
The Evalia, Japanese carmaker Nissan's 7 seater MPV was unveiled at the Delhi Auto Expo 2012 by Bollywood star and Nissan's brand ambassador Ranbir Kapoor. Latest news is that the Evalia was found road testing at the Bangalore – Mysore highway with a sticker – On Test. By this, we can assume that the MPV will soon be up at dealerships for sale.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+