லண்டனில் அதிகாரப்பூர்வ டாக்சியாக மாறும் நிசான் எவாலியா!

லண்டனின் பாரம்பரிய டாக்சியாக திகழ்ந்து வரும் டிஎக்ஸ்4 காருக்கு மாற்றாக டாக்ஸி அவதாரம் எடுக்கிறது நிசான் எவாலியா எம்பிவி கார்.

எவாலியா காரை விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது நிசான். இன்னோவாவுக்கு நேரடி போட்டியாளராக வர இருக்கும் எவாலியா தற்போது ஏக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில், எவாலியாவை பற்றிய சுவாரஸ்யமான செய்தி கசிந்துள்ளது. லண்டன் மாநகரின் பாரம்பரிய டாக்சியாக திகழ்ந்து வரும் டிஎக்ஸ்-4 காருக்கு மாற்றாக டாக்சிஅவதாரம் எடுக்கிறது எவாலியா. நியூயார்க் நகரத்தின் அதிகாரப்பூர்வ டாக்சியாக அறிவிக்கப்பட்ட பின் அடுத்து லண்டன் மாநகரிலும் அதிகாரப்பூர்வ டாக்சியாக பயன்படுத்தப்பட இருக்கிறது நிசான் எவாலியா.

இடவசதி, அதிக மைலேஜ் ஆகிய காரணங்களால் சட்டென்று எவாலியாவை லண்டன் டாக்சி கம்பெனி தேர்வு செய்துள்ளது. டிஎக்ஸ்4 காரில் 2.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், எவாலியாவில் 89பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

கண்ணாடி கூரை, ஸ்லைடிங் கதவுகள் ஆகிய கூடுதல் அம்சங்களை கொண்டது எவாலியா. என்வி200 என்ற பெயரிலும் எவாலியா அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 8, 2012, 13:45 [IST]
English summary
The Nissan Evalia has emerged as a possible replacement of the venerable London Taxi soon after it became the official taxi in New York. The Evalia also called as the NV 200 has replaced the Crown Victoria which were loved by most New Yorkers. The TX4 London taxi with its classic car look and feel also has a large fan following too and it remains to be seen if the NV 200 can win over their hearts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+