இந்தியாவில் லீப் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த நிசான் தீவிர ஆய்வு

உலகின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாக நிசான் லீப் எலக்ட்ரிக் கார் திகழ்கிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள லீஃப் காருக்கு தனது தாயகமான ஜப்பான் மற்றும் மேலை நாட்டு மார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை லீஃப் எலக்ட்ரிக் கார் 20,000 உரிமையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் கார் மார்க்கெட் என்ற பெருமையை பெற்றுள்ள நம் நாட்டு கார் மார்க்கெட்டில் லீஃப் காரை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது.
முழுக்க முழுக்க பேட்டரியில் ஓடும் இந்த கார் கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிசான் பார்வைக்கு வைத்திருந்தது.
இதுகுறித்து நிசான் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிமுனோபு தொகுயமா கூறுகையில்,"லீஃப் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான சாதக பாதக அம்சங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.
இந்த ஆய்வுப் பணிகளை தொடர்ந்து இந்திய மார்க்கெட்டில் லீஃப் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு எட்டப்படும்," என்றார்.
5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட லீஃப் எலக்ட்ரிக் காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 175 கிமீ பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(நிசான் லீஃப் காரின் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications








