வருகிறது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட நிசான் சன்னி?

Nissan Sunny
ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட சன்னி மாடலை நிசான் இந்தியாவில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் சன்னி மிட்சைஸ் செடான் கார் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த டிசம்பரில் டீசல் சன்னி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டதால், மைக்ரா காரைவிட விற்பனையில் முந்தியுள்ளது சன்னி.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலையும் நிசான் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட சன்னி கார் வெளிநாட்டு மார்க்கெட்டுகளில் நிசான் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சாலை நிலைகளுக்கேற்ப இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக சன்னி ஆட்டோமேட்டிக் மாடலை நிசான் ரகசியமாக சோதனை ஓட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, பெட்ரோல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் மாடலாக வருமா அல்லது டீசல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் மாடலாக வருமா என்பது குறித்து அந்த தகவல் உறுதி செய்யவில்லை.

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்டோமேட்டிக் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் ஆல் நியூ ஃபியஸ்ட்டாவின் ஆட்டோமேட்டிக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் விரைவில் நிசானும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,

More from DriveSpark

Article Published On: Thursday, March 22, 2012, 10:23 [IST]
English summary
Nissan Motors is reportedly testing an automatic version of its best selling car in India, the Sunny. The Sunny has quickly overtaken Nissan's micra in recent months and has become a crowd favourite. Nissan already sells an automatic Sunny in international markets and bringing one to one cannot be ruled out.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+