இந்தியாவில் 10 புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்படும்: நிசான்

பெங்களூரில் நடந்த எவாலியா கார் அறிமுக விழாவில் நிசான் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் நிதிஷ் திப்னிஸ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
சர்வதேச அளவில் இந்தியாவை மிக முக்கியமான மார்க்கெட்டாக நிசான் கருதுகிறது. எனவே, இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கனக் கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில் கார் மாடல்களை களமிறக்கி வருகிறோம்.
மைக்ரா, சன்னியை தொடர்ந்து தற்போது எவாலியாவை களமிறக்கி இருக்கிறோம். மேலும், டட்சன் குறைந்த விலை கார்கள் உட்பட 10 புதிய கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.
இதன்மூலம், இந்திய சந்தையில் மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்திக் கொள்ள முடியும் என நம்புகிறோம். தவிர, வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய சேவை அளிக்கும் வகையில் ஷோரூம்கள் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த உள்ளோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஷோரூம்களின் எண்ணிக்கை 90 ஆகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 ஆகவும் உயர்த்த இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








