ஜனவரியில் நிசான் கார் விற்பனை அமோகம்

Nissan Sunny
சன்னியின் விற்பனை சரசரவென உயர்நது வருவதால் புதிய விற்பனை இலக்கை நிசான் கடந்துள்ளது. கடந்த ஜனவரியில் அந்த நிறுவனம் முதன்முறையாக 5,000 கார்கள் என்ற புதிய எண்ணிக்கையை கடந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் இந்தியாவில் வேகமான வளர்ச்சியை பெற்று வரும் கார் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துகொண்டுள்ளது. மைக்ரா பிரிமியம் ஹேட்ச்பேக் காரை அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தாலும் எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சியை பெறாமல் தவித்து வந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த நிறுவனம் அறிமுகம் செய்த சன்னி செடான் கார் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சன்னியின் டீசல் மாடலும் புக்கிங்கில் 4,000 என்ற எண்ணிக்கை கடந்துள்ளது.

இதனால், நிசான் நிறுவனத்தின் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த மாதம் அந்த நிறுவனம் மொத்தம் 5,168 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்து 20 மாதங்களில் இந்த புதிய இலக்கை எட்டியுள்ளது நிசான்.

கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது(1,857 கார்கள்)தற்போது விற்பனை 178 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், நிசானின் வி்ற்பனை வளர்ச்சிக்கு சன்னியின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கிறது. கடந்த மாதம் 3,218 சன்னி கார்கள் விற்பனையாகி நிசான் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்திருக்கிறது. மேலும், கடந்த மாதம் 1,855 மைக்ரா கார்களை விற்பனை செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 1, 2012, 17:58 [IST]
English summary
Nissan Motor India Private Ltd (NMIPL) today reported its highest ever monthly sales in India with a record 5168 units sold in January. This performance is 1857 units up on January 2011, representing a significant increase of 178%. It also smashes Nissan’s previous record month of November 2011 when just over 3,000 units were sold.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+