சிஎன்ஜியில் இயங்கும் சன்னியை களமிறக்க நிசான் ஆயத்தம்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதோடு எரிபொருள் செலவீனத்தையும் சிஎன்ஜி கார்கள் மிச்சப்படுத்தும். இதை கருதியே நிசான் சிஎன்ஜி சன்னியை கொண்டு வருகிறது.
தற்போது சிஎன்ஜி சன்னி ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வருவதாக நிசான் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. மேலும், சிஎன்ஜியில் இயங்கும் சன்னி லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் செல்லும் என தகவல்கள் கூறுகின்றன.
சன்னியின் எக்ஸ்எல் மிட் வேரியண்ட் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. தற்போது இந்த செக்மென்ட்டில் மாருதியின் எஸ்எக்ஸ் 4 செடான் கார் மட்டுமே சிஎன்ஜி வேரியன்ட்டில் கிடைக்கிறது.
மேலும், சன்னியின் பூட் ரூம் 490 லிட்டர் கொள்ளளவு கொண்டிருப்பதால், சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தினாலும் 300 லிட்டர் அளவுக்கு பொருட்கள் வைப்பதற்கான இட வசதியை கொண்டிருக்கும். எனவே, எஸ்எக்ஸ்4 காரைவிட சன்னியில் பூட் ரூம் அதிகமாக இருக்கும்.
எஸ்எக்ஸ்4 காரின் சிஎன்ஜி வேரியன்ட் ரூ.7.72 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சன்னி சிஎன்ஜி வேரியன்ட் ரூ.7.60 லட்சம் என்ற சவால் கொடுக்கும் விலையில் வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








