வரும் செப்டம்பரில் எவாலியா காரை அறிமுகப்படுத்தும் நிசான்

Nissan Evalia
சன்னி சக்சஸை தொடர்ந்து அடுத்து எவாலியா எம்பிவி காரை அறிமுகப்படுத்த நிசான் ஆயத்தமாகியுள்ளது. வரும் செப்டம்பரில் எவாலியாவுக்கு நிசான் நாள் குறித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த எம்பிவி கார் நிச்சயம் நிசானுக்கு பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு எவாலியாவில் பொருத்தப்பட இருக்கும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின்தான் காரணம். ஏனெனில், இந்த எஞ்சின் தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் மைக்ரா, சன்னி, ரெனோ பல்ஸ் உள்பட பல மாடல்களில் பொருத்தப்பட்டு அதிக மைலேஜ் தருவதாக வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளது.

மேலும், 7 பேர் வசதியாக உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் இருக்கை மற்றும் இடவசதியை கொண்டிருக்கும். எளிதில் ஏறி இறங்க வசதியாக மாருதி ஓம்னியில் உள்ளது போன்று ஸ்லைடிங் கதவுகளை கொண்டிருக்கும் என்பதால் எளிதாக ஏறி இறங்க வசதியாக இருக்கும்.

ஆனால், இது எந்தளவுக்கு இந்த எம்பிவி காருக்கு பொருந்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய எம்பிவி காரை நிசான் தயாரிக்க உள்ளது. மேலும், எவாலியாவை ஸ்டைல் என்ற பெயரில் அசோக் லேலண்ட் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக மார்க்கெட்டில் மட்டும் ஸ்டைலை அசோக் லேலண்ட் விற்பனை செய்ய உள்ளது. ரூ.10 லட்சத்துக்குள் வர இருக்கும் இந்த எம்பிவி மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா ஸைலோ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 12, 2012, 10:16 [IST]
English summary
Nissan, which is on a high thanks to the success of its Sunny is all set to launch yet another trend setting model in the form of the Evalia MPV. Sources say The Nissan Evalia's India launch has been scheduled for September.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+