டொயோட்டோவுக்கு போட்டியாக இன்பினிட்டி கார்களை களமிறக்கும் நிசான்
ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தக விரிவாக்கத்தை பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கும் நிலையிலும், இந்தியாவில் சொகுசு கார் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.
இதனால், பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் சொகுசு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகின்றன. அடுத்த ஆண்டு தனது லெக்ஸஸ் பிரிமியம் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மற்றொரு ஜப்பானிய நிறுவனமான டொயோட்டோவும் அறிவித்துவிட்டது.
இவற்றை பார்த்து தற்போது நிசானும் தனது இன்பினிட்டி சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இறக்குமதி செய்வதால் கார்களின் விலை இரட்டிப்பாகும் என்பதால் பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்று இந்தியாவிலேயே இன்பினிட்டி கார்களை அசெம்பிளிங் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், தனது பிராண்டு மதிப்பை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதோடு, எளிதாக விற்பனை வளர்ச்சியையும் எட்ட முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
(இன்பினிட்டி ஜி கூபே சொகுசு கார் கேலரி)


Click it and Unblock the Notifications









