புதிய பிராண்டில் குறைந்த விலை கார்களை தயாரிக்க நிசான் திட்டம்

Nissan Datsun Brand
இந்தியாவில் புதிய பிராண்டில் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானில் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக திகழும் நிசான் இந்திய மார்க்கெட்டில் மிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டுகளில் விரைவான வளர்ச்சியை எட்டுவதற்கு நிசான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காக, தனது தட்சன் பிராண்டை மீண்டும் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு நாடுகளில் தட்சன் பிராண்டில் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து தட்சன் பிராண்டில் குறைந்த விலை கார்களை உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து நிசான் மோட்டார்ஸ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

தட்சன் பிராண்டில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை சர்வதேச அளவில் விற்பனை செய்யவும் நிசான் இலக்கு வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், தனது பிராண்டு பெயரிலேயே குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தால், தற்போது நிசானுக்கு இருக்கும் பிராண்டு மதிப்பு போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவே தட்சன் பிராண்டை மீண்டும் கொண்டு வர நிசான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 2, 2012, 18:08 [IST]
English summary
Nissan Motor, the Japanese carmaker is reportedly planning to revive and launch its low cost car brand Datsun in emerging markets such as India. Japanese newspaper Nikkei has reported that Nissan was planning to revive the Datsun brand especially for countries such a India where demand for low cost cars is higher.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+