ரூ.3.65 லட்சத்தில் மைக்ரா பேஸ் வேரியண்ட்டை களமிறக்கும் நிசான்

அம்சமான ஹேட்ச்பேக் காரான மைக்ரா விற்பனையில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. எனவே, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மைக்ராவின் விலையை கணிசமாக குறைக்க நிசான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக, மைக்ராவில் ஸ்டாண்டர்டு அம்சங்கள் சிலவற்றை நீக்கிவிட்டு புதிய வேரியண்ட்டை களமிறக்குகிறது நிசான். 50 ஆயிரம் வரை விலை குறையும் என்பதால், ரூ.3.65 லட்சம் ஆரம்ப விலையில் புதிய வேரியண்ட் மைக்ரா விற்பனைக்கு வருகிறது.
டில்ட் ஸ்டீயரிங், எஞ்சின் இம்மொபைலைசர், டிரைவர் ஏர்பேக் ஆகியவை புதிய பேஸ் வேரியண்ட்டில் இருக்காது. புதிய மைக்ரா ஹூண்டாய் ஐ10 காருக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








