எவாலியா எம்பிவி காரை அறிமுகப்படுத்தியது நிசான்

மாருதி எர்டிகா, மஹிந்திரா ஸைலோவை விட எவாலியா கூடுதல் விலை கொண்டதாக வந்திருக்கிறது. ஆனால், டொயோட்டா இன்னோவாவைவிட விலை குறைவு என்பதால் டாக்சி ஆப்பரேட்டர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் வந்திருக்கும் எவாலியா அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது.
இதன் ரகத்தை சேர்ந்த பிற மாடல்களுடன் ஒப்பிடும்போது இது 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் என்கிறது நிசான்.
4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்திருக்கும் நிசான் எவாலியா. இதில், பேஸ் வேரியண்ட் ரூ.8.49 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேரியண்ட் வாரியாக விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
எக்ஸ்இ : ரூ.8.49 லட்சம்
எக்ஸ்இ+ : ரூ.8.92 லட்சம்
எக்ஸ்எல் : ரூ.9.49 லட்சம்
எக்ஸ்வி : ரூ.9.99 லட்சம்


Click it and Unblock the Notifications








