26ந் தேதி அறிமுகமாகும் நிசான் எவாலியாவுக்கு புக்கிங் ஆரம்பம்

டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா ஸைலோ உள்ளிட்ட எம்பிவி கார்களுக்கு போட்டியாக புதிய எவாலியா எம்பிவி காரை நிசான் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் ரூ.7.5 லட்சம் முதல் 11.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எம்பிவி கார் 4 வேரியண்ட்களில் வர இருக்கிறது.
இந்த நிலையில், எவாலியாவுக்கு ஒரு லட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு நிசான் டீலர்களில் புக்கிங் துவங்கப்பட்டிருக்கிறது. எவாலியா அறிமுகமான பின்னர் விலை மற்றும் காரில் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் ஒரு ரூபாய் கூட பிடித்தம் செய்யாமல் முழு பணத்தையும் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று நிசான் தெரிவித்துள்ளது.
நிசானின் கூட்டணி நிறுவனமான ரினால்ட் டஸ்ட்டர் அறிமுகத்தின்போது கூட இவ்வாறுதான் அறிவித்திருந்தது. இதன்மூலம், வாடிக்கையாளர்களிடம் நிறைந்த நன்மதிப்பை பெற்ற பிராண்டாக மாற முடியும் என நிசான் நம்பிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








