அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்

நிசான் மைக்ரா
அனைத்து ரக கார்களையும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய மார்க்கெட்டின் தேவைகளை அறிந்துகொண்ட பின்னரே புதிய கார்கள் களமிறக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு மைக்ரா ஹேட்ச்பேக் காரை இந்திய மார்க்கெட்டில் நிசான் அறிமுகம் செய்தது. இதனால், ஓரளவு அறிமுகம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு சன்னி செடான் காரை களமிறக்கியது. சன்னி நிசானுக்கு புதிய முகவரியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. தவிர, வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

அடுத்ததாக, விரைவில் எவாலியா எம்பிவி காரை நிசான் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் மைக்ராவைவிட குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ தகயுகி இசிதாவிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்," இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளோம். அனைத்து ரகங்களிலும் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இதில், மைக்ராவைவிட குறைந்த விலை காரும் அடக்கம். ஆனால், அதற்கு முன்பாக மார்க்கெட் நிலவரம், வாடிக்கையாளர் தேவைகள், எதிர்பார்ப்புகளை அறிந்துகொண்ட பின்னரே விற்பனைக்கு கொண்டு வருவோம்.

மேலும், புதிய கார் மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்வதற்கு ஏதுவாக டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உள்ளோம். தற்போது 74 ஆக உள்ள டீலர் எண்ணிக்கையை நடப்பு நிதி ஆண்டிற்குள் 100ஆக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, August 20, 2012, 11:21 [IST]
English summary
Japanese car maker Nissan is planning to launch more new car models in Indian market. But it will study the local market before taking a call on launching cars that will be priced below its entry level hatchback Micra range models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+