இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மைக்ராவுக்கு நிசான் ரீகால்

Nissan Micra
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மைக்ரா கார்களை திரும்ப பெற இருப்பதாக நிசான் அறிவித்துள்ளது. தவிர, உலக அளவில் மொத்தம் 2.50 லட்சம் கார்களுக்கு அந்த நிறுவனம் ரீகால் விடுத்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக பயன்படுத்தி வருகிறது. சென்னை அருகே தனது கூட்டணி நிறுவனமான ரினால்ட்டுடன் இணைந்து ரூ.4,500 கோடியில் கட்டியுள்ள கார் ஆலையில் இருந்து மைக்ரா ஹேட்ச்பேக் கார்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிலையில், தனது சில கார் மாடல்களில் எரிபொருள் அளவீடு சென்சாரில் கோளாறு இருப்பது குறித்து வந்த புகார்களையடுத்து 2.50 லட்சம் கார்களை சர்வதேச அளவில் அந்த நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

இதில், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மைக்ரா கார்களில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சென்னை ஆலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 9,600 மைக்ரா கார்களை நிசான் திரும்ப பெறுகிறது.

அதேவேளை, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மைக்ரா கார்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று நிசான் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2012, 15:27 [IST]
English summary
Nissan Motors has announced a global recall of nearly 250,000 cars and its made in India car, the Micra is part of the recall process. In a statement to the media, the Japanese carmaker has said it would be recalling 249,522 cars across the globe to rectify a mechanical glitch.All the 9,600 recalled Nissan Micras have been sold in Europe and none of them are in India. This is because the specifications of the Micras sold in India are very much different from the European ones.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+