அடுத்து பிரிமியம் செடான் சில்பியை களமிறக்கும் நிசான்

சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த ஆட்டோ ஷோவில் சில்பி பிரிமியம் செடான் காரை நிசான் பார்வைக்கு வைத்திருந்தது.
முதலில் சீனாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரை அடுத்து இந்தியா உள்ளிட்ட வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மார்க்கெட்டுகளி்ல விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.
சீனாவி்ல் அறிமுகமாக இருக்கும் புதிய சில்பி செடான் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். சில்பிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியாவில் டீசல் மாடலை களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.
செவர்லே குரூஸ், டொயோட்டோ கரொல்லா ஆல்டிஸ், வோக்ஸ்வேகன் ஜெட்டா, ஸ்கோடா லாரா, ஹோண்டா சிவிக், ரினால்ட் ப்ளூயன்ஸ் கார்களுக்கு புதிய சில்பி நெருக்கடியை கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








