சச்சின் வாங்கிய ஸ்போர்ட்ஸ் காருக்கு விளம்பர தூதரான உசேன் போல்ட்

பெர்ஃபார்மென்சுக்கு பெயர் போன ஜிடி-ஆர் ஸ்போர்ட் காரை பிரபலபடுத்தும் விதமாக உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான உசேன் போல்ட்டை விளம்பர தூதராக நியமித்துள்ளது நிசான்.

நிசான் விற்பனை செய்து வரும் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் நன் மதிப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு சச்சின் கூட தன்னிடம் இருந்த ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரை விற்றுவிட்டு நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை இறக்குமதி செய்து வாங்கினார்.


இந்த நிலையில், 2012 மாடல் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை பிரபலப்படுத்தும் விதமாக உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட்டை விளம்பர தூதராக்கியுள்ளது நிசான்.

ஒலிம்பிக் ஜுரம் வேறு பற்றிக் கொண்டுள்ளதால் உசேன் போல்ட் மூலம் எளிதாக உலக அளவில் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை பிரபலப்படுத்த நிசான் கணக்கு போட்டுள்ளது. மேலும், அதிவேக கார்கள் மீது மோகம் கொண்ட உசேன் போல்ட் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஜிடி-ஆர் காரின் பெர்பார்மென்சை பார்த்து தொடர்ந்து அந்த காரை வைத்துள்ளார்.

உசேன் போல்ட்டை விளம்பர தூதராக்கியுள்ள நிசான் அவரை வைத்து ஜிடி-ஆர் காருக்கு விளம்பர பிரச்சாரமும் செய்ய உள்ளது. மேலும், உலகின் முக்கிய விமான நிலையங்களில் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காருடன் உசேன் போல்ட் இருப்பது போன்ற விளம்பர பேனர்களையும் வைத்திருக்கிறது.

மேலும், தனிப்பட்ட முறையில் இந்த காரை வைத்திருப்பதையும், ஜிடி-ஆர் காரின் அருமை பெருமைகளையும் சிலாகித்து கூறியுள்ளார் போல்ட். உலக அளவில் நிசான் நிறுவனத்தின் முதல் விளம்பர பிரச்சாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 13, 2012, 12:06 [IST]
English summary
Japanese carmaker Nissan has partnered with the world's most fastest man, Usain Bolt for a global campaign to promote the 2012 Nissan GT-R sports car. The Jamaican sprinter and Olympic gold medalist will feature in global advertisement campaigns for the carmaker's latest GT-R model.
மேலும்... #nissan #auto news #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+