ஏப்ரலில் நிசான் கார் விற்பனை மும்மடங்கு அதிகரிப்பு

கடந்த மாதம் மொத்தம் 3,467 கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 1201 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் மும்மடங்கு விற்பனை உயர்வை கண்டிருக்கிறது.
இதில், சன்னி கார்களின் விற்பனை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. கடந்த மாதம் 2,012 சன்னி கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது.
தவிர, 1435 மைக்ரா கார்களையும் அந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 16173 சன்னி கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது.
மேலும், சரியான விலை, அதிக இடவசதி, வசதிகள் என மனநிறைவை ஏற்படுத்தும் காராக இருப்பதால், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகிய முன்னணி மாடல்களுக்கு பெரும் நெருக்கடியை நிசான் சன்னி ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








