ஒன்றரை மாதத்தில் 4,000 புக்கிங்குளை வாரி சுருட்டிய சன்னி டீசல்!

கடந்த ஆண்டு செப்டம்பரில் சன்னி மிட் சைஸ் செடான் காரை நிசான் அறிமுகம் செய்தது. அதிக இடவசதியுடன் அம்சமான வடிவமைப்புடன் யாரும் எதிர்பாராத விலையில், வந்த சன்னி வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாகவே கவர்ந்தது.
இருப்பினும், முதலில் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதால், வாடிக்கையாளர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ணத்தை சரியாக புரிந்துகொண்டு கடந்த மாதம் சன்னி டீசலை நிசான் அறிமுகம் செய்தது.
ரூ.7.98 லட்சம் முதல் ரூ.8.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சன்னி டீசல், அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களில் இதுவரை சன்னி டீசல் 4,000 புக்கிங்குகளை பெற்றுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.
நிசான் சன்னி டீசல் காரில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 21.64 கிமீ மைலேஜ் செல்வதாக ஏஆர்ஏஐ சான்று தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








