வெர்னா, சிட்டியை பின்னுக்குத் தள்ளி நம்பர்-1 இடத்தில் சன்னி

கடந்த செப்டம்பரில்தான் சன்னி செடான் காரை நிசான் அறிமுகப்படு்த்தியது. முதலில் பெட்ரோல் மாடலில் வந்தாலும் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் சன்னியின் டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது.
அதுமுதல் சன்னியின் விற்பனை கிடுகிடுவென உயரத் துவங்கியது. இந்த நிலையில், கடந்த மாத விற்பனை புள்ளிவிபரங்களின்படி, மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளது சன்னி.
கடந்த மாதம் 4,151 சன்னி கார்கள் விற்பனையாகியுள்ளன. இதற்கடுத்த இடத்தில் 4,132 ஹூண்டாய் வெர்னா கார்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மிட்சைஸ் மார்க்கெட்டில் கொடிகட்டி பறந்து வந்த ஹோண்டா சிட்டி க்கு கடந்த மாத விற்பனையில் மூன்றாவது இடமே கிடைத்து. கடந்த மாதம் 3,920 சிட்டி கார்கள் விற்பனையானது. வென்ட்டோ நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.
சன்னியின் விற்பனை வளர்ச்சி நிசானுக்கு புதுத்தெம்பை ஊட்டியுள்ளது. தற்போது சன்னி கார் ரூ.5.88 லட்சம் ஆரம்ப விலை முதல் ரூ.8.78 லட்சம் அதிகபட்ச விலை வரையிலும் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








