வென்ட்டோவை பின்னுக்குத் தள்ளி 3ம் இடத்தில் நிசான் சன்னி

Nissan Sunny
கடந்த மாதம் விற்பனையில் வென்ட்டோவை பின்னுக்குத் தள்ளி 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது நிசான் சன்னி.

கடந்த ஆண்டு செப்டரில்தான் சன்னி கார் இந்திய மார்க்கெட்டில் நுழைந்தது. முதலில் பெட்ரோல் மாடலில்தான் சன்னி அறிமுகமானது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் டீசல் சன்னியையும் நிசான் சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதையடுத்து, சன்னியின் விற்பனை பன்மடங்கு உயர்நது வருகிறது. கடந்த பிப்ரவரியில் 3,130 சன்னி கார்கள் விற்பனையாகி இருக்கிறது. இதில், விஷேசமான தகவல் இதுவரை மிட்சைஸ் கார் மார்க்கெட் விற்பனையில் 3ம் இடத்தில் இருந்த வோக்ஸேவேகன் வென்ட்டோவை சன்னி பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை தனதாக்கியுள்ளது.

முதல் இடத்தில் ஹோண்டா சிட்டியும், இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் வெர்னா கார்களும் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிலையில், சன்னியின் விற்பனை வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது வோக்ஸ்வேகன் மட்டுமின்றி ஹூண்டாய், ஹோண்டா கார் நிறுவனங்களை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது.

மேலும், வென்ட்டோவை சன்னி கீழே தள்ளியதால் வோக்ஸ்வேகன் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளது. வென்ட்டோ விற்பனையை அதிகரிக்க அந்த நிறுவனம் பல வழிகளை தேடி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 22, 2012, 15:31 [IST]
English summary
Japanese car maker Nissan motors mid size model sunny gets overwhelming response in the market. The sunny overtakes volkswagen vento in February and taking the third position in the mid size car market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+