நிசான் சன்னி, ரினால்ட் ஸ்கேலா சென்னை ஆன்ரோடு விலை விபரம்
நிசான் சன்னியை ஸ்கேலாவாக மாற்றி வி்ற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது ரினால்ட். சன்னியைவிட ஒரு லட்ச ரூபாய் கூடுதலான விலையில் வந்திருக்கும் புதிய ஸ்கேலா பிரிமியம் அம்சங்கள் கலந்து நிலை நிறுத்தியிருப்பதாக ரினால்ட் கூறியிருக்கிறது.
பெட்ரோல் வேரியண்ட் ஒரு லட்ச ரூபாய் கூடுதல் என்றால், இரு கார்களின் டீசல் வேரியண்ட்கள் கிட்டதட்ட ரூ.63,000 விலை வித்தியாசம் கொண்டிருக்கின்றன.
ஆனால், வடிவமைப்பை தவிர முக்கிய அம்சங்களில் பெரிய வித்தியாசத்தை உணர முடியாததால் ரினால்ட் கூறுவதை வாடிக்கையாளர்கள் ஏற்பார்களா? என்பதை காண சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வடிவமைப்பை விரும்பி கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கேலா நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும். பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஏதுவாக நிசான் சன்னி மற்றும் ரினால்ட் ஸ்கேலாவின் சென்னை ஆன்ரோடு விலை ஒப்பீட்டு விபரம் படத்துக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

நிசான் சன்னி ரினால்ட் ஸ்கேலா விலை விபரம்:
பெட்ரோல் சன்னி ரினால்ட்
எக்ஸ்இ : 6.97 லட்சம் ஆர்எக்ஸ்இ: ரூ.8.13 லட்சம்
எக்ஸ்எல்: ரூ.8.23 லட்சம் ஆர்எக்ஸ்எல்: ரூ.9.13 லட்சம்
எக்ஸ்வி : 9.14 லட்சம் ---------------
டீசல்:
எக்ஸ்எல் : ரூ.9.44 லட்சம் ஆர்எக்ஸ்எல்: ரூ.10.09 லட்சம்
எக்ஸ்வி: ரூ.10.35 லட்சம் ஆர்எக்ஸ்இசட்: ரூ.11.11 லட்சம்


Click it and Unblock the Notifications








