சென்னையில் நிசான் எவாலியா சோதனை: விரைவில் அறிமுகமாகிறது

Nissan Evalia
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்பிவி மாடலான நிசான் எவாலியா சென்னையில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எர்டிகாவின் போட்டியாளராக கருதப்படும் எம்பிவி மாடல்தான் நிசான் எவாலியா. வரும் ஆகஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த காரை ஏற்கனவே பெங்களூர்-மைசூர் சாலையில் நிசான் சோதனை நடத்தியது.

இதைத்தொடர்ந்து, தற்போது சென்னையில் நிசான் நிறுவனம் தீவிரமாக சாலை சோதனைகள் நடத்தி வருகிறது.ரகசியமாக எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் நிசான் எவாலியா சற்று வளத்தியான காராக இருக்கிறது. முன்பக்கம் பானட் சிறியதாக இருக்கிறது. இதேபோன்று, முன்பக்க கதவுகள் குறுகலாக தெரிகிறது.

ஏற்கனவே தெரிவித்தது போன்று பின்புறம் ஸ்லைடிங் கதவுகளை கொண்டிருக்கிறது. உட்புறம் டூவல் டோன் டேஷ்போர்டை கொண்டிருக்கிறது. மைக்ரா, சன்னி ஸ்டீயரிங் வீலை கொண்டிருந்தாலும், ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் இல்லை.

மேனுவல் கன்ட்ரோல் ஏசி பொருத்தப்பட்டிருக்கிறது. மாருதி எர்டிகா போன்று 2+3+2 இருக்கை அமைப்புடன் எவாலியா தடம் பதிக்க வருகிறது. சன்னி டீசல் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் எவாலியா களமிறங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 15, 2012, 10:48 [IST]
English summary
Earlier we had reported that Nissan is planning to launch Evalia in August this year. Now, the new Evalia MPV car has been spotted testing on chennai roads.
மேலும்... #nissan #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+