பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய கான்செப்ட் கார்: நிசான் அறிமுகம்

அந்த கார் நிறுத்தியிருக்கும் இடத்தை கடந்து செல்லும் பார்வையாளர்களை ஒரு நிமிடம் நின்று நிதானித்து பார்த்து செல்லும் வகையில் இன்விட்டேஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஹேட்ச்பேக் காரை நிசான் வடிவமைத்துள்ளது.
தற்போது கான்செப்ட் மாடலாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி-செக்மென்ட்டில் கிராஸ் ஓவர் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் டிரைவிங்கில் ஓர் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நிசான் தெரிவிக்கிறது.
காரை சுற்றிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால், டிரைவிங்கின்போது மிகுந்த பாதுகாப்பை இந்த கார் வழங்கும் என்றும், டிரைவருக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் வகையில் இந்த கார் இருக்கும் என்றும் நிசான் கூறியுள்ளது.
தவிர, இலகு எடை, குறைந்த புகை வெளியிடும் எஞ்சின் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த கார் இங்கிலாந்தில் உள்ள நிசான் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.
ஐரோப்பிய சந்தையில் ஹூண்டாய் ஐ20 மற்றும் கியா ரியோ ஆகிய கார்களுக்கு இந்த இன்விட்டேசன் கிராஸ் ஓவர் கார் நிச்சயம் பெரிய போட்டியை தரும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








