சென்னையில் புதிய பயணிகள் வாகனத்தை சோதனை செய்யும் நிசான்

எவாலியா மூலம் சமீபத்தில் யுட்டிலிட்டி மார்க்கெட்டில் நிசான் நுழைந்தது. இத்தோடு நில்லாமல் அடுத்து வர்த்தக மார்க்கெட்டிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 14 இருக்கைகள் வசதி கொண்ட தனது உர்வேன் பயணிகள் வாகனத்தை விரைவில் களமிறக்கும் முயற்சிகளை அந்த நிறுவனம் துவங்கியிருக்கிறது. 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் இந்த புதிய வேன் பன்முக பயன்பாட்டு வாகனமாக பயன்படுத்தும் அம்சங்களையும் கொண்டிருக்கும்.
ஆம்புலன்ஸ், சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து என அனைத்து விதங்களிலும் பயன்படுத்த முடியும் என்பதால் டெம்போ டிராவலர், டாடா விங்கர் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








