சென்னையில் எல்பிஜியில் ஓடும் ஆட்டோ கட்டணமும் உயர்வு: மக்கள் அவதி

சென்னையில் பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி, எல்பிஜியில் ஓடும் ஆட்டோ டிரைவர்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், ஆட்டோ டிரைவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பெட்ரோல் விலை காரணம் காட்டி ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.10 முதல் ரூ.20 வரை ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கேட்பதால் டிரைவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு போன்று வருமானம் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இதில் பெரிய வேடிக்கையான விஷயமே, சென்னை நகரில் ஓடும் பெரும்பாலான ஆட்டோரிக்ஷாக்கள் எல்பிஜியில் ஓடுகின்றன. இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி இதுபோன்று கட்டணத்தை ஏகத்துக்கும் கூட்டி ஆட்டோ டிரைவர்கள் கொள்ளையடிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியிருப்பினும் பெட்ரோல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர். ஆனால், மத்திய அரசு இதற்கு செவி மடித்து பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2012, 16:05 [IST]
English summary
In Chennai, Commuters complained that auto rickshaws who were collecting a minimum fare of Rs. 20 for half a km to 1 km before the petrol price hike were refusing to take the passengers for the same fare on Thursday. They are now demanding Rs. 40 for the same distance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+