இந்தியாவில் புதிய சிவிக் அறிமுக திட்டத்தை கைவிட்ட ஹோண்டா

சிவிக்
இந்தியாவில் புதிய சிவிக் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஹோண்டா கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் மாடல் இல்லாததால் இந்த முடிவை ஹோண்டா எடுத்துள்ளதாக தெரிகிறது.

டி செக்மென்ட்டில் அழகான செடான் கார் சிவிக். ஆனால், தற்போது ஹோண்டா சிவிக் விற்பனையில் பெரும் பின்னடவை சந்தித்து வருகிறது.

டீசல் மாடல் இல்லாததால் விற்பனையில் பின்தங்கியுள்ளது கண்கூடாக தெரிந்துவிட்டது. இதனால், புதிய சிவிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஹோண்டா கைவிட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் 2013 மாடல் புதிய சிவிக் காரை ஹோண்டா அறிமுகப்படுத்திவிட்டது. அடுத்து இந்த கார் விரைவில் இந்திய மார்க்கெட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் டீசல் கார் டிரென்ட்டாகியுள்ளது. எனவே, டீசல் மாடல் இல்லாமல் சிவிக் செடான் காரை அறிமுகப்படுத்துவது வேஸ்ட் என ஹோண்டா கருதுகிறது.

மேலும், புதிய காரை உற்பத்தி செய்ய ஆலையின் உற்பத்தி பிரிவில் மாற்றங்கள் செய்ய வேண்டியதிருக்கும். மேலும், சப்ளையர்களும் புதிய காருக்கு தக்கவாறு தங்களது உதிரிபாகங்கள் வார்ப்புகளை மாற்ற கூடுதல் செலவழிக்க வேண்டும்.

இவை எல்லாம் செய்தும் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லையென்றால் பிரச்னை எழும். எனவே, டீசல் எஞ்சின் வந்தால் மட்டுமே புதிய சிவிக்கை அறிமுகப்படுத்தலாம் என்ற முடிவுக்கு ஹோண்டா வந்துள்ளது.

மேலும், இதுகுறித்து சப்ளையர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ஹோண்டா அதிகாரப்பூர்வ தகவலை இதுவரை வெளியிடாமல் மவுனம் சாதித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2012, 17:33 [IST]
English summary
Honda Siel dropped its plan of bringing in revamped version of the car to India. As per reports, the new Civic will not make its way to India because it’s somewhat pricier than the current model plus it is not even equipped with diesel engine under the hood.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+