பயன்படுத்திய கார் வாங்க, விற்க.. டிரைவ்ஸ்பார்க் வழங்கும் புதிய சேவை
புதிய கார் வாங்குவதை விட பயன்படுத்திய கார் வாங்குவது சற்று கடினமான காரியமே. சரியான விலையில் நல்ல பயன்படுத்திய காரை வாங்கும்போது, விபரங்களை பெறுவதில் நடைமுறைகள் சிரமங்கள் இருப்பதை தவிர்க்க இயலாது. இதேபோன்றுதான் பயன்படுத்திய பைக் வாங்கும்போது பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த சிரமத்தை குறைக்கும் வகையில், பயன்படுத்திய கார் மற்றும் பைக் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இடையே தகவல்களை எளிதாக பரிமாறும் கொள்ளும் வகையில், புதிய சேவையை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது.

ஒன் இந்தியா குழுமத்தின் கீழ் இயங்கும், நாட்டின் முன்னணி ஆன்லைன் விளம்பர சேவை தளமான கிளிக்.இன் தளத்தின் தேடுபொறியின் மூலம் இந்த புதிய சேவையை டிரைவ்ஸ்பார்க் வழங்குகிறது.
பயன்படுத்திய கார் மற்றும் பைக்கை விற்க முனைபவர்கள் தங்களது கார், பைக் பற்றிய விபரங்களை எங்களது யூஸ்டு கார் மற்றும் யூஸ்டு பைக் பக்கத்தில் இருக்கும் விண்ணப்ப பக்கத்தில் நிரப்பினால் போதும். வாங்க விரும்புவர்கள் பற்றிய தகவல் உங்களது இ-மெயில் முகவரி அல்லது மொபைல்போனுக்கு வந்துவிடும்.
இதேபோன்று, வாங்குபவர்களும் பயன்படுத்திய கார் மற்றும் பைக் பற்றிய விபரங்களை இங்கே பெற முடியும். இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
(யூஸ்டு கார் தேடுதல் பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்)


Click it and Unblock the Notifications








