பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் ஜொலிக்கும் ஹூண்டாய் ஐ20

ஆடி உள்ளிட்ட சொகுசு கார்களில் பகல் நேர ரன்னிங் விளக்குகள்தான் அந்த கார்களின் அழகை ஏகத்துக்கும் உயர்த்துகிறது. இதனால், பகல் நேர ரன்னிங் விளக்குகள் மீதான மோகம் ஏகத்துக்கும் அதிகரித்ததால் தற்போது பிரிமியம் மற்றும் செடான் கார்களில் பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், காஸ்ட்லி ஹேட்ச்பேக் காராக கருதப்படும் ஐ20யின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை கூடுதல் ஆக்சஸெரீயாக வாங்கிக்கொள்ளும் வாய்ப்பை ஹூண்டாய் வழங்குகிறது.
ஐ20யின் டாப் வேரியண்ட்களான ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா வேரியண்ட்கள் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் கிடைக்கும். பகல் நேர ரன்னிங் விளக்குகளுக்கு ரூ.9,990 விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








