எஸ்யூவி மாடல்களை களமிறக்கும் இசூஸு: 1000 கோடி முதலீடு செய்ய திட்டம்
அடுத்து இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் களமிறங்கப் போகும் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த இசூஸு. ஆம், புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இசூஸு டி மேக்ஸ் மற்றும் எம்யூ-7 ஆகிய எஸ்யூவி மாடல்கள் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பட்டியலில் உள்ளன. 7 பேர் மற்றும் 8 பேர் செல்லும் வசதிகொண்டதாக இந்த எஸ்யூவி மாடல்கள் இருக்கும்.

எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் இந்தியாவி்ல் புதிய ஆலை கட்டுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இதற்காக, 1000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவில் புதிய ஆலை கட்டுவது தொடர்பாக, அம்மாநில அரசுடன் இசூஸு அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இதில், சுமூக உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தெரிகிறது.
எனவே, புதிய ஆலை கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படலாம் என தெரிகிறது. வரும் 2014ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2015ம் ஆண்டின் தொடக்கத்திலோ புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், போட்டியாளர்களை விட குறைந்த விலையில் தனது மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு இசூஸு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








