கார்கள் மீது பல்க் வரி: தலையில் இடியை இறக்கிய மராட்டிய அரசு

கார்கள் மீது 4 சதவீதம் வரை கூடுதலான வரியை மஹாராஷ்டிர அரசு விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரியை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதனால், கார்களின் விலை ரூ.5000 முதல் ரூ.3,00,000 வரை அதிகரித்துள்ளது.

இந்த அதிர்ச்சியிலிருந்து வாடிக்கையாளர்கள் இன்னும் மீளாத நிலையில், மராட்டிய அரசு மற்றொரு இடியை கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர் தலையில் இறக்கியுள்ளது.

ஆம், கார்கள் மீது 4 சதவீதம் வரை கூடுதல் வரியை விதிக்க உள்ளது மராட்டிய அரசு. இது அம்மாநில வாடிக்கையாளர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் கார்கள் மீது 2 சதவீத கூடுதல் வரியும், டீசல் கார்கள் மீது 4 சதவீதம் வரையும் உயர்த்த உள்ளது மராட்டிய அரசு. அதேவேளை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிஎன்ஜி என்று கூறப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 28, 2012, 10:51 [IST]
English summary
The Maharashtra state government has proposed 2% increase in tax on petrol vehicle sales plus 4% raise in diesel vehicle sales. This comes in the backdrop of the recent tax hikes in the Union Budget 2012-13.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+