வாகன எல்பிஜி விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்

பெட்ரோல் போன்றே வாகனங்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி விலை நிர்ணயம் தற்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வசம் இருக்கிறது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது எல்பிஜி விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் வாகனங்களுக்கான எல்பிஜி விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், ஆட்டோ ரிக்ஷா கட்டணங்கள் உயர்ந்தன. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது எல்பிஜி விலையை மீண்டும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
இதனால், ஆட்டோ கட்டணங்கள் மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எல்பிஜியில் இயங்கும் கார்களை பயன்படுத்துவோருக்கும் இந்த விலை உயர்வால் கூடுதல் சுமையை ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.43.65க்கு விற்கப்பட்ட ஆட்டோ எல்பிஜி தற்போது ரூ.49.72 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் ஆட்டோ எல்பிஜி கேஸ் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்ட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டீசல் கார்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








