ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரிகோமுக்கு பொலிரோ பரிசு

லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் சிறப்பாக விளையாடினார். இறுதியில் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
இந்த நிலையில், மேரிகோமுக்கு பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா மேரிகோமுக்கு பாராட்டு விழா எடுத்தது. இதில், பொலிரோவை அவருக்கு பரிசாக வழங்கியது. மஹிந்திராவின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைமை அதிகாரி விவேக் நாயர் காரின் சாவியை மேரிகோமிடம் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர் கூறுகையில்," ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த குத்துச் சண்டை விளையாட்டில் மிகுந்த மன உறுதியுடன் ஆடி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மேரிகோமை மஹிந்திரா சார்பில் பாராட்டுவதாக தெரிவித்தார்.
இந்த விழாவில் பேசிய மேரிகோம்," காரை பரிசு வழங்கிய மஹிந்திராவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 'பவர் பேக்டு' எஸ்யூவியான பொலிரோவை பரிசாக பெற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எனது டிரைவிங் ஸ்டைலுக்கு சிறந்த வாகனமாக பொலிரோ இருக்கும்," என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








