பயத்தில் வேலைக்கு வர தயங்கும் மாருதி தொழிலாளர்கள்: உற்பத்தி பாதிப்பு

Manesar plant
தங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற அச்சத்தில் மாருதியின் மானேசர் ஆலை தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை. இதனால், கார் உற்பத்தி சீரடைய இன்னும் தாமதமாகும் என தெரிகிறது.

வன்முறை சம்பவத்தால் மூடப்பட்டிருந்த மானேசர் ஆலையை கடந்த 21ந் தேதி மாருதி திறந்தது. மேலும், 300 தொழிலாளர்களுக்கு மட்டும் பணிக்கு திரும்புமாறு தகவல் கொடுத்திருந்தது.

இந்த நிலையில், உற்பத்தி துவங்கப்பட்ட முதல்நாளில் வெறும் 84 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தாங்கள் வேலைக்கு சென்றால் ஆபத்து ஏற்படும் என கருதி அவர்கள் பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும், ஆலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், விரைவில் மீதமுள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்பலாம் என்று மாருதி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. போதிய தொழிலாளர்கள் இல்லாததால் முதல்கட்டமாக நிர்ணயிக்கப்பட்ட நாள் ஒன்றுக்கு 150 கார்கள் என்ற உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது.

இதனால், உற்பத்தி சீரடைந்து இயல்பு நிலை திரும்புவதற்கு நீண்ட காலதாமதம் ஏற்படும் நிலை இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Friday, August 24, 2012, 10:33 [IST]
English summary
As the facility resumed its production on Tuesday, only 84 workers turned up at the unit from more than 200 workers, who were expected to join the work.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+