பெட்ரோல், டீசலை விட்டால் வேறு வழியே இல்லையா?-விவாதம்

Bullock Cart Van
கண்களையும், காதுகளையும் இறுக மூடிக்கொண்டு பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த முறை பெட்ரோல் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெரும் தொகையை மாத பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுதான் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சரி, மாற்று எரிபொருளில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு செல்லலாம் என்றால் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மின்சார தட்டுப்பாடும் இருப்பதால், அதுவும் சரிபட்டு வராது. விலையும் அதிகம் என்பதோடு சார்ஜ் போடுவதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஹைட்ரஜன் எரிபொருள் சிறந்தது என்றாலும் தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது. மிகுந்த பாதுகாப்பு வசதிகள் தேவைப்படுகிறது.

எல்பிஜி, சிஎன்ஜிக்கான கட்டமைப்பும் போதவில்லை. சரி எத்தனை காலத்துக்குத்தான் பெட்ரோல், டீசலுக்காக பிற நாடுகளை நம்பியிருக்க முடியும். கண்டிப்பாக, மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக, ஆட்டோமொபைல் துறைக்கும், பல்கலைகழகங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிக்கும் சிறப்பு நிதியை ஒதுக்கி அரசாங்கம் விதை விதைத்தால்தான் ஓர் பத்து ஆண்டுகளிலாவது இந்த பிரச்னைக்கு ஓரளவு நிரந்தர தீர்வு காண முடியும்.

மேலும், மாற்று எரிபொருளில் இயங்கும் கான்செப்ட் மாடல் கார், பைக்குகளை நாடு முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் திறமையாக உருவாக்கி வருகின்றனர். இதுபோன்ற தயாரிப்புகளை வணிக ரீதியிலான தயாரிப்பாக மாற்றுவதற்கு அவர்களுக்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது.

இதற்கு அரசு கடனுதவி மற்றும் மானியம் வழங்கி ஊக்குவித்தால் வளைகுடா நம்பியிருக்கும் சூழ்நிலையை குறுகிய காலத்தில் மாற்றிவிடவேண்டும். குறைந்த விலையில் மாற்று எரிபொருளில் இயங்கும் கார், பைக்குகளை உருவாக்கி தர முடியும் என்று கண்களில் நம்பிக்கை ததும்ப அவர்கள் கூறுகின்றனர்.

கண்டிப்பாக குறைந்த விலையில் இதுபோன்ற தயாரிப்புகள் வந்தால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும். திறமையான மாணவர்கள் பிழைப்புக்காக அடுத்த நாட்டுக்கு ஓட மாட்டார்கள்.

இதைவிட மேலை நாடுகள் போன்று எலக்ட்ரிக் கார்கள் மற்றும் மாற்று ஹைபிரிட் கார்களின் விலையில் மானியம் வழங்கி விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இவையெல்லாவற்றையும் விட மாற்று எரிபொருள் தயாரிப்புகளை வாங்குவதற்கு மக்களின் மனநிலையும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.

இந்த மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்குவது குறித்த பெரும் விஷயத்தை ஓர் விவாதமாக எடுத்துக் கொண்டு தீர்வு காண டிரைவ்ஸ்பார்க் விரும்புகிறது. இந்த விவாத செய்தியில் உங்களது கருத்துக்களையும் பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க ஓங்கி குரல் எழுப்புங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 24, 2012, 17:12 [IST]
English summary
In the wake of the recent fuel price hike, governments should take initiatives to promote the fuel sources . Also, Governments should infuse funds into the research and development of other fuel sources.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+