பெட்ரோல் கார்களுக்கு சலுகைகள் வழங்கும் கார் நிறுவனங்கள்

பெட்ரோல் விலை அதிகரிப்பால், டீசல் கார் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால், பெட்ரோல் கார் விற்பனை சரிவு கண்டுள்ளது. எனவே, பெட்ரோல் கார் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி, இலவசங்கள் மற்றும் இலவச சர்வீஸ் என கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.
இதுதவிர, டீலர்களுக்கு பெட்ரோல் கார்கள் மீது கூடுதல் கமிஷனை கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால், டீலர்களும் எல்இடி டிவி பரிசு, இலவச ஆக்சஸெரீஸ் என அவர்தம் பங்குக்கு சலுகைகளை வழங்குகின்றனர். ஆல்ட்டோ மற்றும் வேகன்-ஆர் கார்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை விலையில் தள்ளுபடி பெறலாம்.
எட்டியோஸ், லிவா பெட்ரோல் கார்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் இலவச இன்ஸ்யூரன்ஸ் ஆகியவற்றை டொயோட்டோ வழங்குகிறது. ஆனால், விலையில் தள்ளுபடி இல்லை.
டொயோட்டோவின் பங்காளியான ஹோண்டா கார் நிறுவனம் பிரியோவுக்கு கவர்ச்சிகரமான பைனான்ஸ் திட்டங்களை அறிவித்துள்ளது. பிரியோவுக்கு நல்ல தேவை இருந்தும் சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளை வழங்குகிறது. இயான், சான்ட்ரோ கார்களுக்கு ரூ.10000 முதல் ரூ.15000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதேபோன்று, எல்இடி டிவி போன்ற டீலர் வழியான பரிசு திட்டங்களும் உண்டு.
இருப்பினும், ஷோரூமுக்கு சென்று கார் வாங்கும்போது நாம் பேரம் பேசினால் கூடுதல் சலுகைகளையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








