எண்ணம்போல் வண்ணம் மாற்றி ஜாலம் காட்டும் பீஜோ கார்

இதை மனதில்கொண்டு ஒருவரின் எண்ணத்திற்கு தக்கவாறு கலரை மாற்றிக்கொள்ளும் கார் மாடலை பிரிட்டனை சேர்ந்த பொறியாளர்கள் வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
பீஜோ(பியூஜியட்) ஆர்சிஇசட் ஸ்போர்ட்ஸ் காரைத்தான் இவ்வாறு வடிவமைத்து மூக்கின் மேல் விரல் வைக்க வைத்திருக்கின்றனர்.சமீபத்தில் லண்டனில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
காரின் ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலமாக டிரைவரின் மனோநிலையை தெரிந்து கொண்டு காரின் நிறம் தானாகவே மாறிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரைவர் கோபமாக இருந்தால் ஒரு கலரிலும், மகிழ்ச்சியாக இருந்தால் மற்றொரு நிறத்திலும் காரின் கலர் மாறிவிடும்.
எலக்ட்ரானிக் தொழில்நுட்ப முறையில் காரின் கலர் மாறும் வகையில் இந்த காரை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, பச்சோந்தி காரை வடிவமைத்த வின்ஸ் கிளிஷாம் கூறுகையில்," இதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம். டிரைவரின் மூடுக்கு ஏற்றவாறு இந்த கார் தனது கலரை தானாகவே மாற்றிக்கொள்ளும்," என்றார்.
பீஜோவின் ஆர்சிஇசட் ஸ்போர்ட்ஸ் கார் தனது வடிவமைப்பால் ஏற்கனவே வாடிக்கையாளர் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய தொழில்நுட்பம் பீஜோ ஆர்சிஇசட்டின் மீதான காதலை மேலும் அதிகப்படுத்தும் என்பது சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








