எலக்ட்ரிக் காருக்கு மாறிய போப் ஆண்டவர்!

போப் ஆண்டவர் 16வது பெனக்டிக்ட் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். போப் ஆண்டவரின் அறிவுறுத்தலின்படி வாடிகன் தேவாலயத்தின் முக்கிய அரங்கத்தின் மேற்கூரையில் சோலார் தகடுகளை பதிக்கப்பட்டன.
இதுதவிர, கார்பன் புகையை தவிர்க்கும் தொழில்நுட்ப யுக்திகளும் அங்கு கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையி்ல், அடுத்ததாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் காருக்கு மாறியுள்ளார் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட்.
ரினால்ட் நிறுவனம் கஸ்டமைஸ் செய்து வழங்கியிருக்கும் வெள்ளை நிறம் கொண்ட புதிய காங்கூ எலக்ட்ரிக் காரில் அவர் முதன்முறையாக நேற்று பயணித்தார். கேஸ்டல் கன்டல்ஃபோவில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திலிருந்து வாடிகன் தேவாலயத்திற்கு அவர் அந்த எலக்ட்ரிக் காரில் வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தாலியை சேர்ந்த என்டபிள்யூஜி நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் காரை வாடிகனுக்கு வழங்கியது. அந்த கார் தற்போது அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரினால்ட் வழங்கியுள்ள இந்த புதிய கார் இனி போப் ஆண்டவர் பயன்படுத்துவார் என வாடிகன் தேவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








